/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.ஜி.பி., பள்ளி விளையாட்டு விழா என்.ஜி.பி., பள்ளி விளையாட்டு விழா
என்.ஜி.பி., பள்ளி விளையாட்டு விழா
என்.ஜி.பி., பள்ளி விளையாட்டு விழா
என்.ஜி.பி., பள்ளி விளையாட்டு விழா
ADDED : ஜூலை 28, 2024 01:01 AM

கோவை:கோவை காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி., பள்ளியின், 12வது விளையாட்டு நாள் விழா, பள்ளி மைதானத்தில் நடந்தது. என்.ஜி.பி., கல்விக்குழும தலைவர் நல்ல பழனிசாமி போட்டிகளை துவக்கிவைத்தார்.
மாணவர்களின் அணிவகுப்போடு துவங்கிய நிகழ்வில், 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விளையாட்டு போட்டிகளுடன், கலை நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி பாடத்திட்ட இயக்குனர் மதுரா பழனிசாமி, முதல்வர் ப்ரீத்தா பிரகாஷ் ஆகியோர் பரிசு, பதக்கங்களை வழங்கினர். கல்விக்குழும தாளாளர் தவமணி பழனிசாமி, என்.ஜி.பி. கல்விக் குழும சி.இ.ஓ., புவனேஸ்வரன், தலைமை இயக்க அதிகாரி நடேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.