/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மகளிர் கல்லுாரியில் புதிய ஆய்வகம் துவக்கம் அரசு மகளிர் கல்லுாரியில் புதிய ஆய்வகம் துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் புதிய ஆய்வகம் துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் புதிய ஆய்வகம் துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் புதிய ஆய்வகம் துவக்கம்
ADDED : மார் 11, 2025 11:59 PM

கோவை; கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் புதிய கம்ப்யூட்டர் ஆய்வகம் துவங்கப்பட்டது.
கோவையில் புலியகுளம் பெண்கள் அரசு கல்லூரி, 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இக்கல்லுாரியில் இடப்பற்றாக்குறையை தீர்க்க, ரூ.13.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, பிப்., 14ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. புதிய கட்டடத்துக்கு வகுப்பறைகள் மாற்றப்பட்டன.
கல்லுாரியின், கம்ப்யூட்டர் அறிவியல் துறைக்கு ஆய்வகம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து உஸ்டர் டெக்னாலஜிஸ் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், இந்த ஆய்வகத்தை ஏற்படுத்தித்தர முன்வந்தது.
இதன்படி, ரூ.15 லட்சம் செலவில், 33 கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டன. ஆய்வகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டன. புதிய ஆய்வகம் நேற்று துவங்கி வைக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.