/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நேரு குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேரு குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நேரு குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நேரு குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நேரு குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 19, 2024 02:53 AM

கோவை;நேரு குழுமத்தின் தொழில்நுட்ப வணிக பொறிப்பகம், புதுமைகள் மற்றும் தொழில் முனைவோரை உருவாக்குதலில் மிக முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேரு குழுமம் கையெழுத்திட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அகமதாபாத் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் சுனில் சுக்லா, நேரு குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார் கையெழுத்திட்டனர்.
சுனில் சுக்லா பேசுகையில், ''ஒப்பந்தத்தின் மூலம் கல்வி திட்டங்களுடன் இணைந்து செயல்படுதல், தொழில் முனைவோருக்கான மையத்தை உருவாக்குதல், ஆராய்ச்சியை இணைந்து மேற்கொள்ளுதல், திட்டங்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவைகளை மேற்கொள்ள முடியும்'' என்றார்.
பெங்களுருவில் உள்ள இந்திய தொழில் முனைவோர் நிறுவனத்தின் தென்மண்டல நிறுவனங்களின் திட்ட துறை இயக்குனர் ராமன் குஜ்ரால், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் துணைத்தலைவர் சுந்தர வடிவேலு, நேரு குழுமங்களின் கல்வி மற்றும் நிர்வாக செயல் இயக்குனர் நாகராஜா, என்.ஜி.ஐ., டி.பி.ஐ., செயல் இயக்குனர் வைகுந்த செல்வன், தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் சிவராஜா நிகழ்வில் பங்கேற்றனர்.