/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மொரிஷியஸ் கவுரவ ஆணையராக நேரு குழும தலைவர் நியமனம் மொரிஷியஸ் கவுரவ ஆணையராக நேரு குழும தலைவர் நியமனம்
மொரிஷியஸ் கவுரவ ஆணையராக நேரு குழும தலைவர் நியமனம்
மொரிஷியஸ் கவுரவ ஆணையராக நேரு குழும தலைவர் நியமனம்
மொரிஷியஸ் கவுரவ ஆணையராக நேரு குழும தலைவர் நியமனம்
ADDED : ஜூலை 25, 2024 11:25 PM

கோவை : மொரிஷியஸ் நாட்டின், இந்தியாவுக்கான கவுரவ வணிக ஆணையராக, நேரு கல்வி குழுமங்களின் தலைவர் கிருஷ்ணதாசை, இந்தியா மற்றும் மொரிஷியஸ் அரசுகள் நியமித்துள்ளன.
கல்வி மற்றும் சர்வதேச தொடர்புகளில் சிறப்பான முறையில் பங்களித்ததை அங்கீகரித்து, மொரிஷியஸ் நாட்டின் தென் இந்தியா கவுரவ வணிக ஆணையராக நியமனம் பெற்றுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வமான கடிதத்தை, ரஷ்யாவுக்கான மொரிஷியஸ் துாதுவர் கேஷ்வர் ஜன்கி வழங்கினார். மொரிஷியஸ் தென் இந்தியா கவுரவ வணிக ஆணையர் என்ற முறையில் கிருஷ்ணதாஸ், இந்தியா மொரிஷியஸ் வணிக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், வணிக பரிமாற்றங்கள், ஒருங்கிணைந்து செயல்படவும் பணியாற்றுவார்.
தொடர்ந்து, மொரிஷியஸ் குளோபல் எஜூகேஷன் அவுட்ரீச் நிறுவனர் ஜெயசங்கர், நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணதாஸ் ஆகியோர், முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
எஜூகேஷன் 4.0 திட்டத்தின்படி, கல்வியில் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இந்திய பொருளாதார வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஆசிப் இக்பால், நேரு கல்விக் குழுவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணக்குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.