/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய அளவிலான பைக் ரேஸ் விவசாயிகள் எதிர்ப்பால் ரத்து தேசிய அளவிலான பைக் ரேஸ் விவசாயிகள் எதிர்ப்பால் ரத்து
தேசிய அளவிலான பைக் ரேஸ் விவசாயிகள் எதிர்ப்பால் ரத்து
தேசிய அளவிலான பைக் ரேஸ் விவசாயிகள் எதிர்ப்பால் ரத்து
தேசிய அளவிலான பைக் ரேஸ் விவசாயிகள் எதிர்ப்பால் ரத்து
ADDED : ஜூலை 15, 2024 02:34 AM
அன்னுார்;தேசிய அளவிலான பைக் ரேஸ், விவசாயிகள் எதிர்ப்பால், நேற்று ரத்து செய்யப்பட்டது.
கோயம்புத்துார் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உடன் இணைந்து அன்னுார் அருகே வடக்கலுார், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகளில், 14ம் தேதி தேசிய அளவில் பைக் ரேசும், 27, 28ம் தேதி கார் ரேசும் நடத்துவதாக அறிவித்தன. கோவை மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதியும் பெற்றன.
இந்நிலையில், அப்பகுதி விவசாயிகளும், 'நமது நிலம், நமதே' அமைப்பினரும், 'அதிக வேகத்தில் இயக்கப்படும் பைக் மற்றும் கார்களால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படும்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
'விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, பைக் ரேஸ் நடத்த அனுமதி இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளது,' என அன்னுார் போலீசார் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் பைக் ரேஸ் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். எனினும் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரேஸ் ரத்து என்னும் தகவல் தெரிவதற்கு முன்பே 80 பைக்கில் ரேசில் கலந்து கொள்ள வந்தவர்கள் நேற்று முன்தினம் அன்னுார் வந்தனர். அவர்கள் குருக்கிளையம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று தங்கள் ஊருக்கு திரும்பி சென்றனர்.
ரேஸ் ரத்து என்கிற தகவல் தெரியாமல் ஏராளமான மக்கள் குப்பனுார் பகுதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்