/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய 'கிக் பாக்ஸிங் ' போட்டி இந்துஸ்தான் மாணவி பதக்கம் தேசிய 'கிக் பாக்ஸிங் ' போட்டி இந்துஸ்தான் மாணவி பதக்கம்
தேசிய 'கிக் பாக்ஸிங் ' போட்டி இந்துஸ்தான் மாணவி பதக்கம்
தேசிய 'கிக் பாக்ஸிங் ' போட்டி இந்துஸ்தான் மாணவி பதக்கம்
தேசிய 'கிக் பாக்ஸிங் ' போட்டி இந்துஸ்தான் மாணவி பதக்கம்
ADDED : ஜூன் 20, 2024 04:46 AM
கோவை : மேற்கு வங்கத்தில் நடந்த, தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்ஸிங் போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி மாணவி, இரண்டு தங்கம் வென்றார்.
வாக்கோ இந்தியா கிக் பாக்ஸிங் சம்மேளம், மேற்கு வங்கம் ஸ்போர்ட்ஸ் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், 'தேசிய ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024' போட்டி, மேற்கு வங்கத்தில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். தமிழக அணி சார்பில் சுமார் 60 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாம் ஆண்டு ஏரோனாட்டிகல் இன்ஜி., படிக்கும், யாழினி இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவியை, இந்துஸ்தான் கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் பாராட்டினர்.