/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்வீஸ் ரோட்டில் தேங்கும் மழை நீர் தீர்வு காணுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை சர்வீஸ் ரோட்டில் தேங்கும் மழை நீர் தீர்வு காணுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் மழை நீர் தீர்வு காணுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் மழை நீர் தீர்வு காணுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் மழை நீர் தீர்வு காணுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஜூலை 19, 2024 04:03 PM

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் மழைநீருடன் கழிவு நீரும் வழிந்தோடுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டின் வழியாக உள்ளூர் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதில், பகவதிபாளையம் மற்றும் அண்ணாநகர் பகுதிகளுக்கு செல்ல 'ஒன்வே'யில் வாகனங்களில் பயணிக்கின்றனர்.
மழை காலங்களில், இந்த சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. கழிவு நீருடன் மழை நீர் கலந்து ரோட்டில் வழிந்தோடுகிறது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமப்படுவதுடன், அவ்வழியில் நடந்து செல்லும் போது பொதுமக்கள் மீது கழிவுநீர் தெரிக்கிறது. பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், சர்வீஸ் ரோடு குறுகலாகவும், மக்கள் நடந்து செல்ல முறையான நடைபாதை அமைக்கப்படாமல் இருப்பது தான் பிரச்சனையாக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் கால்வாயும் சற்று சேதம் அடைந்திருப்பதால், கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.
இதை சரி செய்யக்கோரி, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் சார்பில் ரோட்டை அகலப்படுத்த கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டது.
சர்வீஸ் ரோடு விரிவாக்கம் குறித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார். ரோட்டை அகலப்படுத்த அளவீடு பணியும் நடந்தது. அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை என, மக்கள் புலம்புகின்றனர்.
இதுமட்டும் இன்றி, அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், டி.இ.எல்.சி., பள்ளி போன்ற முக்கிய இடங்களில், மழை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.