/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாதன் நினைவு கோப்பை சிறுவர்கள் அமர்க்களம் நாதன் நினைவு கோப்பை சிறுவர்கள் அமர்க்களம்
நாதன் நினைவு கோப்பை சிறுவர்கள் அமர்க்களம்
நாதன் நினைவு கோப்பை சிறுவர்கள் அமர்க்களம்
நாதன் நினைவு கோப்பை சிறுவர்கள் அமர்க்களம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM

கோவை;பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி சரவணம்பட்டி விவேகம் பள்ளியில் நேற்று துவங்கியது.
விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான 'இரண்டாம் ஆண்டு நாதன் நினைவு கோப்பை'க்கான ஐவர் கால்பந்து போட்டி நேற்று துவங்கி, வரும், 7ம் தேதி வரை நடக்கிறது.
போட்டியை விகாஷ் வித்யாலயா பள்ளி தலைவர் ஆண்டவர் ராமசாமி, ரோட்டரி கிளப் நிர்வாகி ஜஸ்டின் பிரேம் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். விவேகம் பள்ளி முதல்வர் லில்லி பிரின்சி உடனிருந்தார்.
இதில், மாணவ மாணவியருக்கு 11, 13, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.நேற்று முதல் நாள், மாணவர்களுக்கான 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. 11 வயது பிரிவில், 37 அணிகளும், 13 வயது பிரிவில் 39 அணிகளும் பங்கேற்றுள்ளன.
போட்டி முடிவுகள்:
11 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில், விவேகம் பள்ளி அணி இரண்டு கோல் வித்தியாசத்தில் லிஸ்யூ பள்ளியையும், சி.எஸ்., அகாடமி அணி மூன்று கோல் வித்தியாசத்தில் தசரதன் சர்வதேச பள்ளியையும் வீழ்த்தின.
13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் டில்லி பப்ளிக் பள்ளி அணி மூன்று கோல் வித்தியாசத்தில் டாப்ஸ் பப்ளிக் பள்ளியையும், வேலம்மாள் பள்ளி அணி மூன்று கோல் வித்தியாசத்தில் டிரினிட்டி பள்ளி அணியையும் வீழ்த்தின.