/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை பல தானிய விதைப்பு இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை பல தானிய விதைப்பு
இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை பல தானிய விதைப்பு
இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை பல தானிய விதைப்பு
இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை பல தானிய விதைப்பு
ADDED : ஜூன் 11, 2024 11:14 PM
பெ.நா.பாளையம்:ரசாயன உரங்கள் அதிகமாக பயன்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மண்ணின் வளத்தை செழிப்பாக்க, இயற்கை விவசாயமே சிறந்தது. தானிய வகைகள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், நறுமண பயிர்களில் விவசாயிகள் தங்களுடைய பகுதியில் எவை தாராளமாக கிடைக்கிறதோ, அவற்றை சேகரித்து, அவற்றை அரை கிலோ முதல் இரண்டு கிலோ வரை கலந்து, ஒரே நேரத்தில் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் பயிரிட வேண்டும்.
சுமார், 50 நாட்களுக்குப் பிறகு அவை நிலத்தில் நன்கு வளர்ந்து, பூ பூக்க துவங்கும். இந்த நேரத்தில் அந்த செடிகளை நன்கு மடக்கி உழ வேண்டும். அவை நிலத்தில் மக்கி நுண்ணுயிர்களை பெருக்கும்.
இதனால் கிடைக்கும் சத்துக்கள் சமச்சீராகவும், சீரான நுண்ணூட்ட சத்துக்களை வழங்குவதாகவும் இருக்கும். இது போன்று பல தானிய பயிர்களை விதைப்பு செய்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்வதால், 200 நாட்களுக்கு பிறகு ரசாயனத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலம், இயற்கை விவசாயத்துக்கு தயாராகிவிடும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.