/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நவீன பாசன முறைகள் வாயிலாக நீரை வெகுவாக சேமிக்கலாம் நவீன பாசன முறைகள் வாயிலாக நீரை வெகுவாக சேமிக்கலாம்
நவீன பாசன முறைகள் வாயிலாக நீரை வெகுவாக சேமிக்கலாம்
நவீன பாசன முறைகள் வாயிலாக நீரை வெகுவாக சேமிக்கலாம்
நவீன பாசன முறைகள் வாயிலாக நீரை வெகுவாக சேமிக்கலாம்
ADDED : ஜூன் 06, 2024 11:15 PM
சூலுார்:'நவீன பாசன முறைகளை பின்பற்றினால், நீரையும் சேமிக்கலாம், வறட்சியையும் வெல்லலாம்' என, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நவீன பாசன முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
நவீன பாசன முறைகள் வாயிலாக தேவையான அளவு மட்டும் நீர் பாய்ச்சி வறட்சியை வெல்ல முடியும். அதிக இடைவெளியில் பயிரிடும் பயிர்களுக்கு வட்டப்பாத்தி பாசன முறை சிறந்தது. இம்முறையில், பாத்திகளை, 4 க்கு 4 மீட்டருக்கு சதுரமாக அமைத்து, செடியை நோக்கி, ஒரு சதவீத சரிவை உண்டாக்கினால், மழை நீர் நல்லமுறையில் தேங்கும்.
சால் பாசன முறையானது வரிசை பயிர்களுக்கு, பார் மீது பயிரிட வேண்டிய கம்பு, சோளம், மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு ஏற்றது. பாத்தி மூலம் நடவு செய்வதை விட, பார் மூலம் நடவு செய்தால், நீர் பாசன அளவு குறையும். நீர் பற்றாக்குறை இருப்பின் ஒரு சால் விட்டு ஒரு சால் பாய்ச்சலாம். மறுமுறை நீர் பாய்ச்சும் போது, விடுபட்ட சால்களில் இருந்து துவங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.