/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீசாரிடம் அகப்பட்ட மொபைல் போன் திருடன் போலீசாரிடம் அகப்பட்ட மொபைல் போன் திருடன்
போலீசாரிடம் அகப்பட்ட மொபைல் போன் திருடன்
போலீசாரிடம் அகப்பட்ட மொபைல் போன் திருடன்
போலீசாரிடம் அகப்பட்ட மொபைல் போன் திருடன்
ADDED : ஜூன் 08, 2024 01:44 AM

கோவை:நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜ் தனது குடும்பத்தினருடன், கோவையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார். பஸ்சில் வெளியே சென்றுவிட்டு நேற்று, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வரும்போது மொபைல் போன் காணாமல் போனது தெரியவந்தது.
பதறிய ராஜ், பஸ் ஸ்டாண்டில் செயல்படும் புறக்காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் கந்தசாமியிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் முத்துகிருஷ்ணன், மதன் ஆகியோர் இணைந்து பஸ்சில் வந்தவர்களை சோதனை செய்தனர்.
மொபைல் போனை திருடியவர் பஸ் ஸ்டாண்டில் ஓட்டம்பிடிக்க, போலீசார் துரத்திப்பிடித்து ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில், செல்வ புரத்தை சேர்ந்த போண்டா (எ) ஆறுமுகம், 53, என்பது தெரியவந்தது. மொபைல் போன் திருடனை பிடித்த போலீசாரை, பொது மக்கள் பாராட்டினர்.