/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போத்தனுார் மார்க்கமாக 'மினி பஸ்' இயக்கணும் போத்தனுார் மார்க்கமாக 'மினி பஸ்' இயக்கணும்
போத்தனுார் மார்க்கமாக 'மினி பஸ்' இயக்கணும்
போத்தனுார் மார்க்கமாக 'மினி பஸ்' இயக்கணும்
போத்தனுார் மார்க்கமாக 'மினி பஸ்' இயக்கணும்
ADDED : ஜூன் 26, 2024 01:50 AM
கோவை;கோவையில் இருந்து போத்தனுார் மார்க்கமாக, மினி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியம் கூறுகையில், ''கோவையின் பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் வருகின்றனர். அவர்கள் இங்கு வந்து சேர வசதியாக, மினி பஸ்கள் இயக்க வேண்டும். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மினி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், ரயில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் ரயில் பயனாளர்கள் பயன்படும் வகையில், மினி பஸ்களை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.