/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம் 'மெமு' ரயில் நாளை முதல் போத்தனுார் வரும் மேட்டுப்பாளையம் 'மெமு' ரயில் நாளை முதல் போத்தனுார் வரும்
மேட்டுப்பாளையம் 'மெமு' ரயில் நாளை முதல் போத்தனுார் வரும்
மேட்டுப்பாளையம் 'மெமு' ரயில் நாளை முதல் போத்தனுார் வரும்
மேட்டுப்பாளையம் 'மெமு' ரயில் நாளை முதல் போத்தனுார் வரும்
ADDED : ஜூலை 18, 2024 11:37 PM
கோவை;மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் 'மெமு' ரயில், போத்தனுார் சந்திப்பு வரை காலை, மதியம் மற்றும் மாலை நேரம் என மூன்று முறை மட்டும் நீட்டிக்கப்படுகிறது.
மெமு ரயில் நீட்டிப்பு சேவையை, மத்திய இணை அமைச்சர் முருகன், இன்று துவக்கி வைக்கிறார். நாளை (20ம் தேதி) முதல் இச்சேவை பயன்பாட்டுக்கு வருகிறது.
முதல் ரயில் * மெமு ரயில் (எண்: 06009) காலை, 8:20க்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும். 8.30க்கு காரமடை வந்தடையும்; 8.38க்கு பெரியநாயக்கன் பாளையம்; 8.44க்கு துடியலுார்; 8.49க்கு வடகோவை; 9:02க்கு கோவை சந்திப்பு; 9.30க்கு போத்தனுார் சந்திப்பு வந்தடையும். * போத்தனுாரில் இருந்து, 9.40க்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 06812), 9:52க்கு கோவை சந்திப்பை வந்தடையும். இங்கிருந்து, 9:55க்கு புறப்பட்டு, 10.01க்கு வடகோவை வந்தடையும்; 10.06க்கு துடியலுார்; 10.11க்கு பெரியநாயக்கன்பாளையம்; 10.21க்கு காரமடை; 10.45க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இரண்டாவது ரயில் * மதியம், 1:05க்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் மெமு ரயில் (எண்: 06815), 1:14க்கு காரமடை வந்தடையும்; 1:24க்கு பெரியநாயக்கன்பாளையம்; 1:29க்கு துடியலுார்; 1:34க்கு வடகோவை; 2:07க்கு கோவை சந்திப்பு; 2:30க்கு போத்தனுார் சந்திப்பு வந்தடையும்.
* மதியம், 3:30க்கு போத்தனுார் சந்திப்பில் இருந்து புறப்படும் மெமு ரயில் (எண்: 06816), 3:42க்கு கோவை சந்திப்பு வரும்; 3:51க்கு வடகோவை; 3:56க்கு துடியலுார்; 4:01க்கு பெரியநாயக்கன்பாளையம்; 4:11க்கு காரமடை; 4:30க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
மூன்றாவது ரயில் * மாலை, 6:55க்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் மெமு ரயில் (எண்: 06823), 7:04க்கு காரமடை வரும்; 7:14க்கு பெரியநாயக்கன்பாளையம்; 7:19க்கு துடியலுார்; 7:24க்கு வடகோவை; 7:32க்கு கோவை சந்திப்பு வரும்; இரவு, 8:00 மணிக்கு போத்தனுார் சந்திப்பு வந்தடையும்.
* இரவு, 8:15க்கு போத்தனுார் சந்திப்பில் இருந்து புறப்படும் மெமு ரயில் (எண்: 06822), 8:25க்கு கோவை சந்திப்பு வரும்; 8:33க்கு வடகோவை; 8:39க்கு துடியலுார்; 8:44க்கு பெரியநாயக்கன்பாளையம்; 8:54க்கு காரமடை; 9:15க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.