Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம்- மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்கணும்

மேட்டுப்பாளையம்- மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்கணும்

மேட்டுப்பாளையம்- மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்கணும்

மேட்டுப்பாளையம்- மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்கணும்

ADDED : ஜூலை 20, 2024 11:23 PM


Google News
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெமு ரயில், போத்தனூர் சந்திப்பு வரை நீடிக்கப்பட்டு, நேற்று முதல் அதன் சேவை துவங்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெமு ரயில், போத்தனூர் சந்திப்பு வரை காலை, மதியம் மற்றும் மாலை நேரம் என மூன்று முறை இதன் இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பு சேவையை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று முன்தினம் கொடியசைத்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் துவக்கி வைத்தார். திட்டமிட்டப்படி அதற்கான சேவை நேற்று முதல் துவங்கியது.

ரயில் நேரம் விவரம்:-

காலை 8:20 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் புறப்படும் மெமு ரயில் காலை 9:30 மணிக்கு போத்தனூர் சந்திப்பு வந்தடையும்.

போத்தனூரில் காலை 9:40க்கு புறப்படும் மெமு ரயில், காலை 10:45 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். அதே போல் மேட்டுப்பாளையத்தில் மதியம் 1:05க்கு புறப்பட்டு, 2:30 மணிக்கு போத்தனூரை அடையும்.

மதியம் 3:30 மணிக்கு போத்தனூரில் புறப்படும் மெமு ரயில், மாலை 4:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மாலை 6:55க்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் மெமு ரயில், இரவு 8 மணிக்கு போத்தனூர் சந்திப்பு வந்தடையும். இரவு 8:15க்கு போத்தனூரில் புறப்படும் மெமு ரயில் இரவு 9:15க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதுகுறித்து, 'நம்ம மேட்டுப்பாளையம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய்குமார் கூறுகையில், மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது போத்தனூர் வரை இயக்கப்படுவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.

இதனால் பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியடைவார்கள். இதனை சரி செய்ய கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து, 12 பெட்டிகளுடன் மெமு ரயிலை இயக்க வேண்டும்.

பராமரிப்பு பணி காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து கோவை வரும் ரயில்கள், போத்தனூரில் நிறுத்தப்படுகின்றன.

அது போன்ற சூழ்நிலைகளில், இந்த ரயில் மிகவும் பயன் உள்ளதாக அமையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் செல்வோருக்கு பண செலவு, நேர செலவு குறையும், என்றார்.

-----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us