/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மெட்ரோ' ரயில் வழித்தடம் 4.2 கி.மீ., குறைப்பு! கோவை, திருப்பூர் தொழில்துறையினர் அதிர்ச்சி 'மெட்ரோ' ரயில் வழித்தடம் 4.2 கி.மீ., குறைப்பு! கோவை, திருப்பூர் தொழில்துறையினர் அதிர்ச்சி
'மெட்ரோ' ரயில் வழித்தடம் 4.2 கி.மீ., குறைப்பு! கோவை, திருப்பூர் தொழில்துறையினர் அதிர்ச்சி
'மெட்ரோ' ரயில் வழித்தடம் 4.2 கி.மீ., குறைப்பு! கோவை, திருப்பூர் தொழில்துறையினர் அதிர்ச்சி
'மெட்ரோ' ரயில் வழித்தடம் 4.2 கி.மீ., குறைப்பு! கோவை, திருப்பூர் தொழில்துறையினர் அதிர்ச்சி
ADDED : ஜூலை 07, 2024 09:03 PM
கோவை:கோவையில் இயக்க திட்டமிட்டுள்ள 'மெட்ரோ' ரயில் வழித்தடங்களில், 4.2 கி.மீ., குறைக்கப்பட்டுள்ளது. இது, தொழில்துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய நகராக, கோவை படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு நிறுவனங்கள் வர ஆரம்பித்துள்ளன. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதில், மிக முக்கியமாக போக்குவரத்து வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. நகர்ப்பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டினாலும், எதிர்கால வளர்ச்சியை கணக்கிட்டு, 'மெட்ரோ' ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.
ஆரம்பத்தில் திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக, 144 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
உக்கடத்தில் இருந்து வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு இணைப்பு பாதை அமைக்கவும் வழித்தடம் முடிவு செய்யப்பட்டது. தேவையான இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை பயன்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது.
திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
இதில், முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு என இரு வழித்தடங்களில் மட்டும் செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. அதை ஆய்வு செய்த தமிழக அரசு, அனுமதி மற்றும் நிதியுதவி கோரி, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
இச்சூழலில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழுவினர் கோவையில், 'மெட்ரோ' ரயில் செயல்படுத்தும் வழித்தடங்களை ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில், 'மெட்ரோ' சந்திப்பு நிலையம் அமைய இருக்கிறது. இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் வழியாக அண்ணாதுரை சிலை சந்திப்பு - 2.7 கி.மீ., அண்ணாதுரை சிலையில் இருந்து நீலாம்பூர் வரை - 14.7 கி.மீ., அங்கிருந்து விமான நிலையம் வருதல் - 4.2 கி.மீ., டெப்போ இணைப்பு - 1.4 கி.மீ., என மொத்தம் 23 கி.மீ., சத்தி ரோட்டில், கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரை, 16 கி.மீ., துாரம் என, மொத்தம், 39 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என இதற்கு முன் கூறப்பட்டு இருந்தது.
குறைக்கப்பட்ட துாரம்
தற்போது ஆசிய வங்கிக்குழுவினர் ஆய்வு செய்தபோது, 4.2 கி.மீ., துாரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, சத்தி ரோட்டில் 16 கி.மீ., என்பது, 14.4 கி.மீ., என சுருக்கப்பட்டு உள்ளது. அவிநாசி ரோட்டில், 23 கி.மீ., இருந்ததை, 20.4 கி.மீ., ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, நீலாம்பூர் பி.எஸ்.ஜி., கல்லுாரி வரை சென்று திரும்பும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது சின்னியம்பாளையத்தில் பார்க் பிளாசா அருகே திரும்பி, பைபாஸ் பகுதியில் ஸ்டேஷன் அமைத்து, விமான நிலையம் வரும் வகையில் வழித்தடத்தில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி வரை, 'மெட்ரோ' ரயில் இயக்குவது தொடர்பாக முதலில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அவிநாசி வரை நீட்டித்தால் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயனடைய வாய்ப்பு இருப்பதாக, ஆலோசனை சொல்லப்பட்டது. திருப்பூர் தொழில்துறையினர், கோவையில் செயல்படுத்தும் 'மெட்ரோ' ரயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.
இச்சூழலில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த நீலாம்பூர் என்பதை, சின்னியம்பாளையம் வரை சுருக்கி இருப்பது, தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில், 'மெட்ரோ' சந்திப்பு நிலையம் அமைய இருக்கிறது. இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் வழியாக அண்ணாதுரை சிலை சந்திப்பு - 2.7 கி.மீ., அண்ணாதுரை சிலையில் இருந்து நீலாம்பூர் வரை - 14.7 கி.மீ., அங்கிருந்து விமான நிலையம் வருதல் - 4.2 கி.மீ., டெப்போ இணைப்பு - 1.4 கி.மீ., என மொத்தம் 23 கி.மீ., சத்தி ரோட்டில், கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரை, 16 கி.மீ., துாரம் என, மொத்தம், 39 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என, இதற்கு முன் கூறப்பட்டு இருந்தது.