/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மெத்தனால் இருப்பு: கண்காணிக்க எஸ்.பி., அறிவுறுத்தல் மெத்தனால் இருப்பு: கண்காணிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
மெத்தனால் இருப்பு: கண்காணிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
மெத்தனால் இருப்பு: கண்காணிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
மெத்தனால் இருப்பு: கண்காணிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 11:53 PM
கோவை;கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கள்ளச்சாரயம் தயாரிக்க மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன், மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சேர்ந்தவர்களை அழைத்து கலந்துரையாடினார்.
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில், தொழிற்சாலை உரிமையாளர்கள், 11 பேர் பங்கேற்றனர். இதில், மெத்தனால் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல், எவ்வாறு நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து, அறிவுரைகள் வழங்கினார். குறிப்பாக, மெத்தனால் இருப்பு நிலவரத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.