/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று நடக்கிறது மனநல விழிப்புணர்வு மராத்தான் இன்று நடக்கிறது மனநல விழிப்புணர்வு மராத்தான்
இன்று நடக்கிறது மனநல விழிப்புணர்வு மராத்தான்
இன்று நடக்கிறது மனநல விழிப்புணர்வு மராத்தான்
இன்று நடக்கிறது மனநல விழிப்புணர்வு மராத்தான்
ADDED : ஜூலை 21, 2024 12:50 AM
கோவை:கோவையில் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில், மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 'ரன் பார் மைண்ட்' என்றபெயரில், மராத்தான் ஓட்டம் வரும் 21ம் தேதி (ஞாயிறு) நடக்கிறது.
இந்த ஓட்டம் 3 கி.மீ., 5 கி.மீ., மற்றும் 10 கி.மீ., துாரம் என்ற அளவில் மூன்று பிரிவுகளாக நடக்கிறது.காலை 6:00 மணிக்கு வ.உ.சி., மைதானத்தில் துவங்கி, ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று காலை, 7:00 மணிக்கு மீண்டும் வ.உ.சி., மைதானத்தை அடைகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க, 1000 தன்னார்வலர்கள் தங்கள் பெயர்களை முன் பதிவு செய்துள்ளனர். போட்டியை ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரவி துவக்கி வைக்கிறார்.
இது குறித்து, கொங்குநாடு மனநல மருத்துவ அறக்கட்டளை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ்குமார் கூறியதாவது:
இன்றைக்கு மக்களுக்கு மற்ற நோய்கள் குறித்து இருக்கும் விழிப்புணர்வு, மனநோய் குறித்து இல்லை. மனநல பாதிப்பால் மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வது, போதை பொருட்களுக்கு அடிமையாவது உள்ளிட்ட பல பிரச்னைக்கு மனநோய்தான் காரணம்.
இதற்கு என்ன தீர்வு, எப்படி வைத்தியம் செய்து கொள்வது என்பது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தவே மராத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மனநல மருத்துவர் அசோசியேஷன் தலைவர் பன்னீர்செல்வம், மூத்த மருத்துவர்கள் பிரதீப், மோனி மற்றும் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.