Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவ கல்லுாரி மேம்படுத்தப்படும்! பழங்குடியின நலத்துறை அமைச்சர் பேச்சு

மருத்துவ கல்லுாரி மேம்படுத்தப்படும்! பழங்குடியின நலத்துறை அமைச்சர் பேச்சு

மருத்துவ கல்லுாரி மேம்படுத்தப்படும்! பழங்குடியின நலத்துறை அமைச்சர் பேச்சு

மருத்துவ கல்லுாரி மேம்படுத்தப்படும்! பழங்குடியின நலத்துறை அமைச்சர் பேச்சு

ADDED : ஜூலை 30, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு கலெக்டர் அலுவலக அரங்கில் பழங்குடியின நலத்துறையின் செயல்கள் மற்றும் திட்டங்களின், மாவட்ட ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, எம்.எல்.ஏ.க்கள் பிரபாகரன், பாபு, பிரசேனன், பிரேம்குமார், சாந்தகுமாரி, சுமோத், மம்மிக்குட்டி, ஷம்சுதீன், முகமது முஹசின், மாவட்ட கலெக்டர் சித்ரா, எஸ்.பி. ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கேளு பேசியதாவது:

பழங்குடியின நலத்துறையின் கீழ் செயல்படும் பாலக்காடு மருத்துவக் கல்லூரியின் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, சிறந்த தரத்துடன் மேம்படுத்தப்படும். மேலும், மருத்துவ கல்லுாரி முழுமையாகச் செயல்படத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவக் கல்லுாரியில் உள்நோயாளிகள் சிகிச்சை மற்றும் ஆபரேஷன் தியேட்டர்கள் துவங்குவது உள்ளிட்ட விஷயங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்படும். தற்போது பாலக்காட்டில் செயல்படும் செவிலியர் கல்லூரியில், எஸ்.சி., இட ஒதுக்கீடு அரசுக் கல்லூரிகளில் எவ்வாறு உள்ளதோ அதே போன்று இருக்கும். இது சம்பந்தமாக, செயல்படுத்தக்கூடிய விஷயங்களை ஆராயப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் ஜாதிச் சான்றிதழ் தொடர்பான குழப்பத்தைத் தீர்க்க வருவாய்த் துறை அமைச்சருடன் பேச்சு நடத்தி உள்ளேன். அட்டப்பாடியில் தொழிலும் வருவாயும் உறுதி செய்யும் வகையில் 'தினை கிராமம்' திட்டத்தை விரிவுபடுத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us