/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணித திறன் பயிற்சி கல்வித்துறை ஏற்பாடு கணித திறன் பயிற்சி கல்வித்துறை ஏற்பாடு
கணித திறன் பயிற்சி கல்வித்துறை ஏற்பாடு
கணித திறன் பயிற்சி கல்வித்துறை ஏற்பாடு
கணித திறன் பயிற்சி கல்வித்துறை ஏற்பாடு
ADDED : ஜூன் 25, 2024 11:10 PM
பெ.நா.பாளையம்;அரசு பள்ளிகளில் படிக்கும் திறன் குறைந்த மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுமென, தலைமை ஆசிரியர்களை, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் எழுதும் திறன், வாசிக்கும் திறன், மற்றும் அடிப்படை கணித திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் திறனை மேம்படுத்த, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து, நடப்பு கல்வி ஆண்டில் சிறப்பு பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யும்படி தலைமை ஆசிரியர்களை, பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.