/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணித பாடத் தேர்வு கடினம்; அதிக மதிப்பெண் பெற முடியாது கணித பாடத் தேர்வு கடினம்; அதிக மதிப்பெண் பெற முடியாது
கணித பாடத் தேர்வு கடினம்; அதிக மதிப்பெண் பெற முடியாது
கணித பாடத் தேர்வு கடினம்; அதிக மதிப்பெண் பெற முடியாது
கணித பாடத் தேர்வு கடினம்; அதிக மதிப்பெண் பெற முடியாது
ADDED : மார் 11, 2025 11:42 PM

அன்னுார்; பிளஸ் 2 கணித பாடத்தில் அதிக மதிப்பெண் பெற முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர்.
அதிக மதிப்பெண் பெற முடியாது
திவேஷ், ஆணைப்பள்ளிபுதுார்.
வழக்கமாக கணித பாடத்தில், அதிக மதிப்பெண் பெற முடியும். இதனால் பட்டப்படிப்பில் நல்ல கல்லுாரியில் சேர உதவியாக இருக்கும். ஆனால் தேர்வு கடினமாக இருந்தது. அதிக மதிப்பெண் பெற முடியாது.
எளிதில் தேர்ச்சி பெறலாம்
அருண் பிரசாத், மூக்கனுார்.
ஐந்து மதிப்பெண்களில் ஏழு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மிக எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களும் ஓரளவு எளிதாக இருந்தது. மிக எளிதில் தேர்ச்சி பெறலாம்.
கேள்விகள் கடினம்
மனோஜ் குமார், புள்ளாமடை.
ஒரு மதிப்பெண் பகுதியில், 20 கேள்விகளும், இரண்டு மதிப்பெண் பகுதியில் ஏழு கேள்விகளும், மூன்று மதிப்பெண் பகுதியில் ஏழு கேள்விகளும், ஐந்து மதிப்பெண்ணில் ஏழு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.
இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. இதனால் அதிகம் மதிப்பெண் பெறுவது சிரமம்.