ADDED : ஜூன் 21, 2024 12:24 AM
ஆனைமலை:ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யாவிடம், ஆலம்விழுது அமைப்பினர் மனு கொடுத்தனர்.
மனுவில், 'ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், உயிர் ஆதாரமாக விளங்கும் ஆற்றில், இறைச்சி கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நீர் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளும் குடிக்கின்றன.
எனவே, ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.