/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மராத்தான் போட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மராத்தான் போட்டி
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மராத்தான் போட்டி
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மராத்தான் போட்டி
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மராத்தான் போட்டி
ADDED : ஜூலை 29, 2024 11:34 PM

கோவை;பொருளாதாரத்தில் பின்தங்கிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
'ஹாப்பி பீட் அறக்கட்டளை' சார்பில் ஏழை, எளிய விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதார உதவி அளிக்கும் வகையில், கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி அருகில் மராத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஓட்டத்தை, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன், பி.ஆர்.எஸ்., முதல்வர் செட்ரிக், கீதாஞ்சலி பள்ளி தாளாளர் அழகிரிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1200 வீரர், வீராங்கனையினர் பங்கேற்றனர். 5 கி.மீ., 10 கி.மீ., ஆகிய இரு பிரிவுகளில் மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
மராத்தான் ஓட்டம் கீதாஞ்சலி பள்ளி வளாகத்தில் துவங்கி, கொடிசியா வளாகம் வழியாக சேரன் மாநகர் சென்று திரும்பி கீதாஞ்சலி பள்ளியில் நிறைவடைந்தது.
இந்த மராத்தான் ஓட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடினார்.
மராத்தான் மூலம் திரட்டப்பட்ட நான்கு லட்சம் ரூபாயை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.