/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்! 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் பேச்சு விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்! 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் பேச்சு
விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்! 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் பேச்சு
விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்! 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் பேச்சு
விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்! 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் பேச்சு
ADDED : ஜூலை 28, 2024 01:15 AM

கிணத்துக்கடவு;''விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிக்கு பல விஞ்ஞானிகள் உள்ளனர். அதே போல் விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்,'' என, 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் டிஜிட்டல் ஈக்வலைசர் சார்பில், 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் மற்றும் 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் இந்த மையத்தை துவக்கி வைத்தனர்.
இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
தற்போது, தமிழ் படித்தால் முடியுமா என பலர் கேட்கின்றனர். ஆனால், தமிழனாலும், தமிழாலும் முடியும் என பலர் நிரூபித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் அன்னை தமிழில் ராக்கெட் சயின்ஸ் பற்றி கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிக்கு பல விஞ்ஞானிகள் உள்ளனர். அதே போல் விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும். மாணவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏர் முனை முதல், போர் முனை வரை அனைத்து துறையிலும் நமது மூளைகள் சேவை செய்ய வேண்டும். எதை கற்கிறோம் என்பதை விட, எப்படி கற்கிறோம் என்பதே முக்கியம்.
மாணவர்கள் படிப்பதை தாண்டி, செயல் முறையில் செய்து பார்த்தல் அவசியம். மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.
அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் தலைவர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.