/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மணி மேல்நிலைபள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு மணி மேல்நிலைபள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
மணி மேல்நிலைபள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
மணி மேல்நிலைபள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
மணி மேல்நிலைபள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : ஜூலை 22, 2024 11:57 PM

கோவை;மணி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சந்திப்பு, பள்ளி அரங்கில் நடந்தது. அதில் 150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் 25க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்தும் வந்து பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு, அன்றைய பள்ளி நாட்களின் மலரும் நினைவுகளை, மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 'ரிட்டர்ன் கிப்ட்' வழங்கப்பட்டது.