/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கல்லுாரியில் படிக்கும்போது நண்பர்களை உருவாக்கணும்' 'கல்லுாரியில் படிக்கும்போது நண்பர்களை உருவாக்கணும்'
'கல்லுாரியில் படிக்கும்போது நண்பர்களை உருவாக்கணும்'
'கல்லுாரியில் படிக்கும்போது நண்பர்களை உருவாக்கணும்'
'கல்லுாரியில் படிக்கும்போது நண்பர்களை உருவாக்கணும்'
ADDED : ஜூலை 11, 2024 06:17 AM
கோவை : சின்னவேடம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களின் தலைவர் சுப்பிரமணியன், கல்லுாரியின் தாளாளர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், ''கல்லுாரி காலத்தில் சிறந்த நண்பர்களை, மாணவர்களை உருவாக்க வேண்டும். கற்றலை நேசிக்க வேண்டும். மொழி ஆளுமை உடையவராக இருக்க வேண்டும்,'' என்று பேசினார். ஐ.பி.எம்., இன்ஜினியரிங் துறைத்தலைவர் ஜோதி சேகரன், இதய நல மருத்துவர் மகுட முடி, கல்லுாரியின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார், எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் சி.இ.ஓ டேனியல் ஆகியோர், நிகழ்வில் கலந்துகொண்டனர்.