/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்டாளம்மன் கோவிலில் 12ல் மகா கும்பாபிஷேகம் பட்டாளம்மன் கோவிலில் 12ல் மகா கும்பாபிஷேகம்
பட்டாளம்மன் கோவிலில் 12ல் மகா கும்பாபிஷேகம்
பட்டாளம்மன் கோவிலில் 12ல் மகா கும்பாபிஷேகம்
பட்டாளம்மன் கோவிலில் 12ல் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 06, 2024 02:24 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பட்டாளம்மன் கோவிலில், வரும் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் விநாயகர், மதுரை வீரன், வெள்ளையம்மன் - பொம்மியம்மன், பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும், 11ம் தேதி துவங்குகிறது.
அன்று, மாலை, 4:00 மணிக்கு, புனித தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்சிகள் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்சிகள் நடக்கிறது.
வரும், 12ம் தேதி, காலை 7:30 மணிக்கு, சுவாமிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நிகழ்சிகள் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு, விமான மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.