/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை மாணவிக்கு 12 பதக்கம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை மாணவிக்கு 12 பதக்கம்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை மாணவிக்கு 12 பதக்கம்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை மாணவிக்கு 12 பதக்கம்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை மாணவிக்கு 12 பதக்கம்
ADDED : ஜூலை 22, 2024 11:24 PM

கோவை:மாநிலளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை மாணவி, 12 பதக்கங்களை பெற்று அசத்தினார்.
கோவை ரைபிள் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான, 49வது ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த இந்த போட்டியை, மாநகர போலீஸ் கமிஷனரும், கோவை ரைபிள் அசோசியேஷன் தலைவருமான பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,655 துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, விமானப்படை நிர்வாக கல்லுாரி ஏர் கமாண்டன்ட் விகாஸ் வாஹி மற்றும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
போட்டியில், மதுரை ரைபிள் கிளப்பை சேர்ந்த வீராங்கனை மெல்வீனா ஏஞ்சலின், 18, என்பவர், 50 மீட்டர் ரைபிள், 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று அதிகபட்சமாக, 11 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் என, 12 பதக்கங்களை வென்று அசத்தினார். கோவை ரைபிள் கிளப்பை சேர்ந்த இலக்கியா, 6 பதக்கங்களும், சுதிஷ்னா, 5 பதக்கங்களும் பெற்றனர்.