/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி
ADDED : ஜூலை 25, 2024 12:21 AM
கோவை : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினருக்கு கைவினை பொருள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழிலுக்கு, கடனுதவி வழங்கப்படுகிறது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம், கடன் உதவி வழங்கி வருகிறது.
அதற்கு குடும்ப ஆண்டு வருவாய் 30,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருப்பது அவசியம். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே, கடனுதவி வழங்கப்படும்.
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினை பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு, அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இரு பாலருக்கும், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.