/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காவலாளி அடித்துக்கொலை: குடிகார வாலிபருக்கு 'ஆயுள்' காவலாளி அடித்துக்கொலை: குடிகார வாலிபருக்கு 'ஆயுள்'
காவலாளி அடித்துக்கொலை: குடிகார வாலிபருக்கு 'ஆயுள்'
காவலாளி அடித்துக்கொலை: குடிகார வாலிபருக்கு 'ஆயுள்'
காவலாளி அடித்துக்கொலை: குடிகார வாலிபருக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 09, 2024 11:12 PM
கோவை;காவலாளியை அடித்துக் கொன்ற வழக்கில், வாலிபருக்கு ஆயுள்சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, பீளமேடு, துரைசாமி லேஅவுட்டில் வசித்து வந்தவர் ஹரிநாராயணன்,65. பாரதி காலனியில், தனியார் கட்டுமான நிறுவனத்தினர் அமைத்துள்ள ெஷட்டில், காவலாளியாக பணியாற்றி வந்தார். காந்திமாநகரை சேர்ந்த சூர்யா,26, என்பவர், கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, தினசரி மது அருந்தி வந்தார். இதை ஹரி நாராயணன் தட்டி கேட்டதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
2019, செப்., 5ல், மது குடிக்க வந்த சூர்யாவை தடுத்த போது, ஆத்திரமடைந்து ஹரிநாராயணனை மட்டையால் அடித்து, கொலை செய்தார். பீளமேடு போலீசார் விசாரித்து, சூர்யாவை கைது செய்தனர்.
அவர் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி சசிரேகா, சூர்யாவுக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிவராமகிருஷ்ணன் ஆஜரானார்.