/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய சட்டத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் புதிய சட்டத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய சட்டத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய சட்டத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய சட்டத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 01:53 AM
கோவை;புதிய சட்டத்திற்கு எதிராக, கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு, நாடு முழுவதும் வக்கீல்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி, வரும் 8ம் தேதி வரை தொடர் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில், ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவையில் நேற்று இரண்டாவது நாளாக, 3,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றங்களில் விசாரணை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்கீல் சங்க கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார், வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத பா.ஜ., வக்கீல்கள் சிலர், கருப்பு 'கோட்' அணிந்து, போராட்டம் நடந்த பகுதியில் வலம் வந்தனர். இதை பார்த்து அங்கிருந்த வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோர்ட் வளாகத்தில், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.