ADDED : ஜூலை 08, 2024 12:54 AM
வால்பாறை:வால்பாறையில், வக்கீல்கள் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, வால்பாறையில் வக்கீல்கள் சங்கம் சார்பில், கோர்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வக்கீல்கள் சங்க தலைவர் ஷாநவாஷ்கான் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சங்க செயலாளர் பெருமாள், வக்கீல்கள் பால்பாண்டி, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷமிட்டனர்.