/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோர்ட் புறக்கணிப்பை கைவிட வக்கீல்கள் முடிவு கோர்ட் புறக்கணிப்பை கைவிட வக்கீல்கள் முடிவு
கோர்ட் புறக்கணிப்பை கைவிட வக்கீல்கள் முடிவு
கோர்ட் புறக்கணிப்பை கைவிட வக்கீல்கள் முடிவு
கோர்ட் புறக்கணிப்பை கைவிட வக்கீல்கள் முடிவு
ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
கோவை;மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தைக் கைவிட, கோவையில் சில வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, 116 வக்கீல்கள், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு அழைப்பை ஏற்று, கடந்த 1ம் தேதியில் இருந்து, நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்கிறோம். போராட்ட களத்தில், கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. வழக்காடிகள் மற்றும் வக்கீல்கள் நலன் கருதி, வரும் 15ம் தேதி முதல், நீதிமன்றத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.