/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அன்னுாரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு அன்னுாரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
அன்னுாரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
அன்னுாரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
அன்னுாரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 08, 2024 11:32 PM
அன்னுார்:அன்னுாரில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள், கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து அன்னுார் கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் ஆஜராகவில்லை. பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதுகுறித்து வக்கீல் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'திருச்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட மாநில குழு முடிவின்படி, வருகிற 12ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு தொடரும்,' என்றனர்.