/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நெல்லிக்கனி' திட்டம் துவக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நெல்லிக்கனி' திட்டம் துவக்கம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நெல்லிக்கனி' திட்டம் துவக்கம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நெல்லிக்கனி' திட்டம் துவக்கம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நெல்லிக்கனி' திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 24, 2024 11:49 PM

கோவை : மாணவர்களுக்கு தன்னம்பிக்கை எழுச்சியூட்டும் 'நெல்லிக்கனி' திட்டம், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.
'நெல்லிக்கனி' திட்டம், கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறநெறிகளையும், தன்னம்பிக்கை உணர்வினையும் அளிக்கும் விதமாக, ரோட்டரி கிளப் ஆப் கோவை அமைப்புடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இத்திட்டம் 2017ம் ஆண்டு அக்., 16ம் தேதி முதன் முதலாக கோவை மாவட்டத்தில், 20 அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, 40 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டுக்கான நெல்லிக்கனி திட்டத்தின் முதல் நிகழ்வு, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக சிறப்புரை ஆற்றினர். ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ரோட்டரி கிளப் ஆப் கோவை சங்க தலைவர் ராம்குமார், வருங்கால தலைவர் சித்ரா, நெல்லிக்கனி திட்ட தலைவர் சாண்டியாகோ ஜேசு, தலைமை ஆசிரியை மணிமாலா உட்பட பலர் பங்கேற்றனர்.