ADDED : ஜூலை 24, 2024 08:33 PM
கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க தெற்கு தாலுகா மாநாடு, பி.ஆர்., நிலையத்தில் நடந்தது. துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைவராக பொம்முதுரை, செயலாளராக ரமேஷ்குமார், பொருளாளராக செல்வகுமார் உள்ளிட்டோர் தேர்வாயினர்.
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் ஓய்வூதிய தொகையை, மூவாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நமது நிருபர் -