/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கேரள அரசு நீரை வெளியேற்றுகிறது தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது' 'கேரள அரசு நீரை வெளியேற்றுகிறது தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது'
'கேரள அரசு நீரை வெளியேற்றுகிறது தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது'
'கேரள அரசு நீரை வெளியேற்றுகிறது தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது'
'கேரள அரசு நீரை வெளியேற்றுகிறது தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது'
ADDED : ஜூலை 22, 2024 01:48 AM
பெ.நா.பாளையம்:துடியலூரில், தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில், 50 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கலாம். ஐந்து அடி குறைவாக சேமிப்பதால், 19 சதவீத குடிநீர் இல்லாமல் போகிறது.
கேரள அரசு, அணையின் பாதுகாப்பை காரணம் கூறி, நீரை வெளியேற்றுகிறது. இதை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க., அரசு கண்டுகொள்ளாமல், வேடிக்கை பார்க்கிறது.
அணையில் முழுமையாக தண்ணீர் தேக்கினால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு ஒரு ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது.
சிறுவாணி அணையை தூர் வார வேண்டும். கேரள அரசுடன் தொடர்பு கொண்டு, 50 அடி உயரத்துக்கு நீரை தேக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கி உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோவை நகரைச் சுற்றியுள்ள குளங்களில், நீரை சேமிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.