/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜோசப் விஜயின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும்: அர்ஜுன் சம்பத் காட்டம் ஜோசப் விஜயின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும்: அர்ஜுன் சம்பத் காட்டம்
ஜோசப் விஜயின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும்: அர்ஜுன் சம்பத் காட்டம்
ஜோசப் விஜயின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும்: அர்ஜுன் சம்பத் காட்டம்
ஜோசப் விஜயின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும்: அர்ஜுன் சம்பத் காட்டம்
ADDED : ஜூலை 05, 2024 02:51 AM

கோவை:பா.ஜ.,வை எதிர்க்கத் தொடங்கியுள்ள ஜோசப் விஜயின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும். த.வெ.க., மூடு விழா காணும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நடிகர் ஜோசப் விஜய், போன வார கூட்டத்தில் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்; இந்த வாரம் இல்லை. போன வாரம் ஆன்மிக அரசியல்; இந்தவாரம் திராவிட அரசியல். போன வாரம் போதைக்கு எதிர்ப்பு; இந்த வாரம் நீட் எதிர்ப்பு. போன வாரம் தி.மு.க., எதிர்ப்பு; இந்த வாரம் பா.ஜ., எதிர்ப்பு. போன வாரம் நடிகர் விஜய், இந்த வாரம் ஜோசப் விஜய்.
ஒரு வாரத்தில் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில் முரண்பாடுகளைப் பாரத்தால், வெகு விரைவில் த.வெ.க., மூடு விழா காணும் எனத் தோன்றுகிறது. எம்.ஜி. ஆர்., ஜெ., சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், விஜயகாந்த், கமலஹாசன், இதோ தொடங்கப் போகிறேன் என்று சொன்ன ரஜினிகாந்த் ஆகியோரைப் பார்த்துவிட்டோம். இவ்வளவு பேரைப் பார்த்த எங்களுக்கு நீங்கள் சுண்டைக்காய்.
அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது. அதற்கு போராட வேண்டும், சிறை செல்ல வேண்டும். வந்தவுடன் முதல்வர் பதவியை மக்கள் தூக்கிக் கொடுத்து விட மாட்டார்கள்.
இனி தமிழகத்தில் எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வரவே கூடாது. கமலின் ம.நீ.ம., வரிசையில், ஜோசப் விஜயின் த.வெ.க., மாறப்போகிறது.
தி.மு.க..வின் ஊதுகுழலாக த.வெ.க., உருவாகி விட்டது. வெகு விரைவில் தி.மு.க.,வின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் மாறுவார். அப்போதுதான் அவரை கோட் படம் வெளியாகும். இல்லாவிட்டால், திராவிட மாடல் அரசு பல்வேறு இடையூறுகளை அவருக்கு ஏற்படுத்தும். தற்போதே நெருக்கடி கொடுப்பதால்தான், ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. ஜோசப் விஜயை நம்பி, அவரின் ரசிகர்கள் ஏமாந்து விட வேண்டாம்.
இவ்வாறு, அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.