/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜமாபந்தி இன்று துவக்கம் மக்கள் மனு கொடுக்கலாம் ஜமாபந்தி இன்று துவக்கம் மக்கள் மனு கொடுக்கலாம்
ஜமாபந்தி இன்று துவக்கம் மக்கள் மனு கொடுக்கலாம்
ஜமாபந்தி இன்று துவக்கம் மக்கள் மனு கொடுக்கலாம்
ஜமாபந்தி இன்று துவக்கம் மக்கள் மனு கொடுக்கலாம்
ADDED : ஜூன் 20, 2024 05:14 AM
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலும், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், இன்று, ஜமாபந்தி துவங்குகிறது.
உடுமலை தாலுகாவிற்குட்பட்ட கிராம கணக்குகள் தணிக்கை, வருவாய் தீர்வாயம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் ஜமாபந்தி, இன்று துவங்குகிறது.
வரும், 27ம் தேதி வரை, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
இன்று காலை, 10:00 மணிக்கு, உடுமலை உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நடக்கிறது. நாளை (21ம் தேதி) குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நடக்கிறது.
* மடத்துக்குளம் தாலுகாவில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடக்கிறது. இன்று, மடத்துக்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கும், நாளை (21ம் தேதி) துங்காவி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நடக்கிறது.
* பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், கிணத்துக்கடவு தாலுகாவில், தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில், ஜமாபந்தி துவங்குகிறது. இன்று, வடசித்துார் உள்வட்டத்துக்கும், நாளை, கிணத்துக்கடவு உள்வட்டத்துக்கும் நடக்கிறது.
* பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. இன்று, ராமபட்டிணம் உள்வட்டத்துக்கும், நாளை பொள்ளாச்சி வடக்கு உள்வட்டத்துக்கும் நடக்கிறது.
* ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், சப்-கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. இன்று, ஆனைமலை உள்வட்டத்துக்கும், நாளை மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்துக்கும் நடக்கிறது.
* வால்பாறை தாலுகா அலுவலகத்தில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையில், வால்பாறை உள்வட்டத்துக்கான ஜமாபந்தி இன்று நடக்கிறது.
எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசின் நலத்திட்டங்களான முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள், அரசின் பலன்கள், சான்றுகள், பட்டா மாறுதல், நில அளவை, நத்தம் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது பிரச்னைகள் குறித்து மனு கொடுத்து தீர்வு காணலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிருபர் குழு -