/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சீசன்தான்! நல்ல மகசூலும், வருமானமும் உத்தரவாதம் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சீசன்தான்! நல்ல மகசூலும், வருமானமும் உத்தரவாதம்
ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சீசன்தான்! நல்ல மகசூலும், வருமானமும் உத்தரவாதம்
ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சீசன்தான்! நல்ல மகசூலும், வருமானமும் உத்தரவாதம்
ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் சீசன்தான்! நல்ல மகசூலும், வருமானமும் உத்தரவாதம்
மக்காச்சோளம் தேவை அதிகரிக்கும்
தற்போது தமிழகத்தில், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், 45 லட்சம் டன் அளவு தேவைப்படுகிறது. எத்தனால் உற்பத்தி நிறுவனங்களின் வருகையால், இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோஎச்(எம்) 6
இந்த ரகம், 110 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு இறவையில் 7,350 கிலோ மகசூலும் மற்றும் மானாவரியில் 4,906 கிலோ மகசூலும் தரக்கூடியது. சோள அடிச்சாம்பல் நோய், மேடிஸ், இலைக் கருகல் நோய்கள் போன்றவற்றை எதிர்க்கும் திறனுடையது. தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற பருமனான மணிகள் உடையது.
கோஎச் (எம்) 8
இந்த ரகம், 95 முதல் 100 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு இறவையில் 7,500 முதல் 8,000 கிலோ மகசூலும், மானாவரியில் 5,000 முதல் 5,500 கிலோ மகசூலும் தரக்கூடியது. தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. சோள அடிச்சாம்பல் நோய், மேடிஸ் மற்றும் இலைக் கருகல் நோய்களை எதிர்க்கும் திறனுடையது.
கோஎச் (எம்) 11
இந்த ஒட்டு ரகம், ஓர் வழி ஒட்டு கலப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இறவையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 8,100 கிலோ மகசூலும் மானாவாரியில் 6,590 கிலோ மகசூலும் தரக்கூடியது. நடுத்தர வயதுடையது. வறட்சியைத் தாங்கி வளரும். ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற பெரியமணிகள், அதிக விதை எடை உடையது. சிறந்த தீவனப் பண்புகளைக் கொண்டது.
விஜிஐ(எம்) எச் 2
இந்த ஒட்டு ரகம், ஓர் வழி ஒட்டு கலப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 95 முதல் 100 நாட்கள் வயதுடையது. மானாவாரியில் ஏக்கருக்கு 6,350 கிலோ கிடைக்கும். பசுமை மாறா தன்மை உடைய இந்த வீரிய ஒட்டு, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற தானியம் உடையது. 81 சதவீதம் முழு தானியம் காணும் திறனுடையது. படைப்புழு, தண்டு துளைப்பான், கரிக்கோல் அழுகல் போன்ற பூச்சி மற்றும் நோய்களுக்கு, மிதமான எதிர்க்கும் திறன் கொண்டது.