/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுய தொழில் துவங்க வாங்களேன் பட்டியலின மக்களுக்கு அழைப்பு சுய தொழில் துவங்க வாங்களேன் பட்டியலின மக்களுக்கு அழைப்பு
சுய தொழில் துவங்க வாங்களேன் பட்டியலின மக்களுக்கு அழைப்பு
சுய தொழில் துவங்க வாங்களேன் பட்டியலின மக்களுக்கு அழைப்பு
சுய தொழில் துவங்க வாங்களேன் பட்டியலின மக்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 26, 2024 01:53 AM
கோவை:பட்டியலின மற்றும் பழங்குடியினர் சுய தொழில் துவங்குவதற்கு வழங்கப்படும் கடனுதவியில் ரூ.1.5 கோடி வரை, மானியமாக வழங்கப்படுகிறது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், இச்சமுதாய மக்களை ஒருங்கிணைத்து முன்னேற்ற பாதையில் செல்லவும், 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், புதியதாக தொழில் செய்யவோ அல்லது ஏற்கனவே தொழில் செய்வோர் விரிவாக்கம் செய்யவோ விண்ணப்பிக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.5 கோடி வரை மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.
சொந்த முதலீட்டை தவிர்க்கும் வகையில், தகுதியான மானியம் முன்னரே வழங்கப்படும். விவசாயம் தவிர்த்து அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தகுதியான தொழில்கள் அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
புதிய தொழில் துவங்குவோருக்கு, அதிகபட்ச வயது வரம்பு - 55 ஆகும்; கல்வித்தகுதி தேவையில்லை. தொழில்முனைவோருக்கான பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள், திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் கூர்ந்தாய்வு செய்து, தகுதி அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
கடனுதவி பெறுவதற்கு, நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாக, மாவட்ட தொழில் மையம் விளங்கும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.