/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளையாட்டு காயங்களை தடுக்க 'ஆர்தோ ஒன்' அறிமுகம் விளையாட்டு காயங்களை தடுக்க 'ஆர்தோ ஒன்' அறிமுகம்
விளையாட்டு காயங்களை தடுக்க 'ஆர்தோ ஒன்' அறிமுகம்
விளையாட்டு காயங்களை தடுக்க 'ஆர்தோ ஒன்' அறிமுகம்
விளையாட்டு காயங்களை தடுக்க 'ஆர்தோ ஒன்' அறிமுகம்
ADDED : ஜூன் 21, 2024 12:49 AM

கோவை;கோவையில் எலும்புகளுக்கான சிறப்பு சிகிச்சை மையமான ஆர்த்தோ ஒன், 'ஹால்ட் ஸ்போர்ட்ஸ் இன்ஜூரிஸ்' எனும் இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை ஜி.டி., அரங்கத்தில் நடந்த ஆர்த்தோ ஒன் அகாடமி சீரிஸ் கருத்தரங்கில் இந்த இயக்கத்தை, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா துவக்கி வைத்தார்.
விளையாடும் போது ஏற்படக்கூடிய பலவிதமான காயங்கள் மற்றும் அவற்றை தடுக்கும்வழிமுறைகள் குறித்து விளையாட்டு வீரர்களிடம்கொண்டு சேர்ப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு தலைவர் ராஜன் பேசுகையில், ''இந்தியாவில் பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு முட்டியில் காயம் ஏற்படுவது சகஜமானதாக உள்ளது. விளையாடும் போது ஏற்படும் காயங்களில், 65 சதவீதம் தடுக்கப்பட கூடியவை'' என்றார்.
இதில், இந்திய கால்பந்துக் குழுவின் முன்னாள் தலைவர் விஜயன், முன்னாள் இந்திய வாலிபால் வீரர் ஸ்ரீதரன், இந்தியா கிரிக்கெட் குழுவின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் ஜான் கிளாஸ்டர், தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, நடராஜன் ஐ.ஆர்.எஸ்., ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் நடந்த விவாதங்களில், ஸ்போர்ட்ஸ் சார்ந்த மருத்துவ வல்லுனர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் என 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.