Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதை பரிசோதனை நிலையத்தில் சர்வதேச சான்றிதழ்கள் வாங்கலாம்

விதை பரிசோதனை நிலையத்தில் சர்வதேச சான்றிதழ்கள் வாங்கலாம்

விதை பரிசோதனை நிலையத்தில் சர்வதேச சான்றிதழ்கள் வாங்கலாம்

விதை பரிசோதனை நிலையத்தில் சர்வதேச சான்றிதழ்கள் வாங்கலாம்

ADDED : ஜூலை 03, 2024 09:28 PM


Google News
பொள்ளாச்சி: சர்வதேச விதை ஏற்றுமதிக்கு, கோவை விதை பரிசோதனை நிலையத்தால் வழங்கப்படும் விதை சான்றிதழ்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சார்ந்த விதை பரிசோதனை நிலையங்களில், முதன்முதலில் சர்வதேச அங்கீகாரம் பெற்றது கோவை விதை பரிசோதனை நிலையம்.

விதை பரிசோதனை நிலையத்தில், விவசாயிகள் ஏற்றுமதி செய்யும் விதைகளை, பரிசோதனை செய்து ஆரஞ்ச் நிற சர்வதேச விதை குவியல் சான்றிதழ் மற்றும் நீல நிற சர்வதேச விதை மாதிரி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தானியங்கள், பயறு வகைகள், காய்கறி பயிர்களுக்கு விதைக்குவியல்களிலிருந்து மாதிரிகள் எடுக்கவும், அவற்றின் புறத்துாய்மை, பிற தானிய வகைகள், முளைப்புத்திறன், ஈரப்பதம் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பன்னாட்டு குழும அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள், தனியார் விதை விற்பனை நிறுவனங்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் விதை மாதிரிகளை கொடுத்து சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஆரஞ்ச் சர்வதேச விதை குவியல் சான்றிதழ் பெற நான்காயிரம் ரூபாயும், நீல நிற சர்வதேச விதை மாதிரி சான்றிதழுக்கு இரண்டாயிரம் ரூபாயும் செலுத்தி, பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிய, தடாகம் சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை அணுகலாம். seedanalystcbe@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us