/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்தல் முடிவு அறிய மக்களிடையே ஆர்வம் தேர்தல் முடிவு அறிய மக்களிடையே ஆர்வம்
தேர்தல் முடிவு அறிய மக்களிடையே ஆர்வம்
தேர்தல் முடிவு அறிய மக்களிடையே ஆர்வம்
தேர்தல் முடிவு அறிய மக்களிடையே ஆர்வம்
ADDED : ஜூன் 05, 2024 01:20 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், மக்கள் பலரும், 'டிவி' மற்றும் மொபைல்போன் வாயிலாக லோக்சபா தேர்தல் முடிவுகளை அறிய ஆர்வம் காட்டினர்.
நாட்டின், 18-வது லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்றது. அவ்வகையில், தமிழகத்தில், ஏப்., 19ல், ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளம், செய்தித்தாள், 'டிவி' சேனல்களில் ஒவ்வொரு கட்சியினரும், தங்களுக்கே வெற்றி என்ற, தோரணையில் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கையில், எந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும், யார் அடுத்த பிரதமர், பிரதான கட்சிகள் பெற்ற ஓட்டுகள், கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்குமா, என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தது.
அதன்படி, நேற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கிபோது, பொள்ளாச்சி, மக்கள் பலரும், 'டிவி' மற்றும் மொபைல்போன் வாயிலாக லோக்சபா தேர்தல் முடிவுகளை அறிய ஆர்வம் காட்டினர். தொடர்ந்து, மாலை வரை, ஒவ்வொரு தொகுதியின் முன்னணி நிலவரங்களை தெரிந்து கொண்டு, சக நண்பர்களிடம் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர்.