/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உறிஞ்சி கிணற்றில் சேர் அகற்றும் பணி தீவிரம் உறிஞ்சி கிணற்றில் சேர் அகற்றும் பணி தீவிரம்
உறிஞ்சி கிணற்றில் சேர் அகற்றும் பணி தீவிரம்
உறிஞ்சி கிணற்றில் சேர் அகற்றும் பணி தீவிரம்
உறிஞ்சி கிணற்றில் சேர் அகற்றும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 17, 2024 11:45 PM
மேட்டுப்பாளையம் : பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் சாமன்னா நீரேற்று நிலையத்தில், உள்ள உறிஞ்சி கிணற்றில் சேர் புகுந்தது. சேரை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி சுமார் 14எம்.எல்.டி. வரை தண்ணீர்எடுத்து, சாமன்னா தலைமை நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமன்னா நீரேற்று நிலையத்தில் உள்ள உறிஞ்சி கிணற்றில் சேர் புகுந்தது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் உள்ளது. சேரை அகற்றும் பணி இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. சேரை அகற்றினால் மட்டுமே குடிநீர் விநியோகத்திற்கு தண்ணீர் எடுக்க முடியும்.
இதனிடையே சேர் அகற்றும் பணியை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.