/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
ADDED : ஜூன் 11, 2024 11:09 PM
சூலுார்:சூலுார் வட்டாரத்தில் நடப்பாண்டில், ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், சூலுார் வட்டாரத்தில் நீலம்பூர், கிட்டாம்பாளையம், காங்கயம் பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்று கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். மேலும், விவசாயிகளை இணைத்து ஒருங்கிணைந்த விவசாய குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.