/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'இன்டெக் 2024' தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது 'இன்டெக் 2024' தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது
'இன்டெக் 2024' தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது
'இன்டெக் 2024' தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது
'இன்டெக் 2024' தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது
ADDED : ஜூன் 06, 2024 08:16 PM

கோவை:'இன்டெக் 2024' சர்வதேச தொழில் கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. கொடிசியா நடத்தும் இந்த கண்காட்சி, 20வது பதிப்பு, 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கண்காட்சியை இந்திய தொழில் வர்த்தக சபையின் தென் மண்டல தலைவர் நந்தினி துவக்கி வைத்தார். கொடிசியா தலைவர் திருஞானம், இன்டெக் 2024 சேர்மன் ராமச்சந்திரன் பங்கேற்றனர். காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. மதியம் 2:00 மணி வரை தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் பார்வையிடும் நேரமாகவும், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கண்காட்சியின் துவக்க விழாவில், விருந்தினராக பங்கேற்று பேசிய டி.வி.எஸ்., சப்ளை செயின் சொல்யூசன்ஸ் செயல் தலைவர் தினேஷ், ''உலக அளவில் இன்ஜினியரிங் தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் இன்ஜினியரிங் ஏற்றுமதி பங்கு உலக வர்த்தகத்தில் 4.6 சதவீதமாக உள்ளது. இது 10 சதவீதமாக உயர வாய்ப்புகள் உள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கு வளர்ச்சி இருக்கும்,'' என்றார்.