/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விற்பனைக்கு வரும் சொத்தின் மீது 'பேங்க் சார்ஜ்' இருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தல் விற்பனைக்கு வரும் சொத்தின் மீது 'பேங்க் சார்ஜ்' இருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தல்
விற்பனைக்கு வரும் சொத்தின் மீது 'பேங்க் சார்ஜ்' இருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தல்
விற்பனைக்கு வரும் சொத்தின் மீது 'பேங்க் சார்ஜ்' இருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தல்
விற்பனைக்கு வரும் சொத்தின் மீது 'பேங்க் சார்ஜ்' இருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2024 01:19 AM
சில சமயங்களில் அசல் ஆவணம் கிரையம் செய்யப்படும் போதே, கூடுதல் பிரதிகள் பதிவு செய்யப்படுவதுண்டு. இதை பதிவு சட்டம் அனுமதிக்கிறது என்கிறார், கோவை வக்கீல் நாகராஜன்.
அவர் கூறியதாவது:
சில ஆவணங்களில் சொத்தின் உரிமையாளர் வாழ்நாள் முழுவதும், சொத்தை அனுபவிக்கும் உரிமையை, தன் மனைவிக்கோ அல்லது தன் அன்புக்குரியவருக்கோ, அவர் வாழ்நாள் வரை அனுபவித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து ஜீவனம் செய்து கொண்டு, மேற்படி ஆயுள் பாத்தியதை உரிமதாரர் இறந்த பின், மகனுக்கோ, மகளுக்கோ முழு சுதந்திரத்துடன் விற்கும் உரிமையை கொடுத்திருப்பார்.
அவ்வாறான சூழ்நிலையில், சொத்து கிரையத்துக்கு வரும் போது, ஆயுள் பாத்தியதை உரிமம் வைத்துள்ளவரும், கையொப்பமிட வேண்டும். அல்லது, அவரிடம் விடுதலை பத்திரம் பெற்று பதிவு செய்த பின்பே, விற்பனை செய்ய வேண்டும்.
சொத்து, நிறுவனம் அல்லது கம்பெனியின் பெயரில் இருந்தால், அந்த நிறுவனத்தின் memorandam and articles of association படித்து பார்த்தும் சொத்தை விற்கவோ, வாங்கவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் அதிகாரம் பெற்றுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.
விற்பனைக்கு வரும் சொத்தின் மீது, பேங்க் சார்ஜ் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று search report company secretary இடம் பெற்று சரிபார்க்க வேண்டும். விற்பனை செய்வதற்காக, பிரத்யேகமாக இயக்குனர்களின் board resolution முறையாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
சில சமயங்களில் அசல் ஆவணம் கிரையம் செய்யப்படும் போதே, கூடுதல் பிரதிகள் பதிவு செய்யப்படுவதுண்டு. இதை பதிவு சட்டம் அனுமதிக்கிறது.
இருப்பினும், அந்த சொத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில், எத்தனை பிரதிகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அனைத்தையும் சொத்தை கிரையம் பெறுபவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவற்றை பெற தவறினால், பிற்காலத்தில் அந்த பிரதி ஆவணங்களை வைத்து வில்லங்கப்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதை சரிபார்க்க, அசல் ஆவணத்தின் முதல் பக்கத்தின் பின்புறம் இது அசல் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வேளையில், மற்ற பிரதிகள் விற்பவரிடம் உள்ளது என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98422 50145.