ADDED : ஜூன் 02, 2024 11:26 PM

மேட்டுப்பாளையம்;தொழில் வரி, டிரேட் லைசென்ஸ் ஆகியவை முறையாக உள்ளதா என, நகராட்சி கமிஷனர் அமுதா, நகராட்சி கடைகளில் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலும், அண்ணா வணிக வளாகத்திலும், 50க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் முறையாக தொழில் வரி செலுத்தி உள்ளார்களா. டிரேட் லைசென்ஸ் எடுக்கப்பட்டுள்ளதா என, ஒவ்வொரு கடையாக, கமிஷனர் அமுதா ஆய்வு செய்தார். அப்போது தொழில் வரி, டிரெட் லைசென்ஸ் பெறாதவர்கள், உடனடியாக நகராட்சி அலுவலகத்தில், அதற்கான தொகையை செலுத்தி, லைசென்ஸ் பெற வேண்டும், என வியாபாரி களிடம், கமிஷனர் கூறினார்.
அப்போது அண்ணா வணிக வளாகத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்யாததால், மழைக்காலத்தில் மழை நீர் கடைகளின் உள்ளே வருகிறது. இதனால் பொருட்கள் சேதம் அடைகின்றன. எனவே சாக்கடையில் உள்ள மண்ணை உடனடியாக எடுக்க வேண்டும் என, கடை வியாபாரிகள், கமிஷனரிடம் கூறினர். அதற்கு நகராட்சி கமிஷனர் சாக்கடையை சுத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.