/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு

நிழற்கூரை தேவை
நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி தேர்நிலையம் பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூரை இல்லாததால், பழநி, உடுமலை வழி செல்லும் பயணியர் திறந்த வெளியில் நிற்கின்றனர். மழைக்காலம் என்பதால் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக நிழற்கூரையாவது அமைக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடு ங் க
ஜமீன் ஊத்துக்குளி 3வது வார்டு காந்திநகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'ஜமீன் ஊத்துக்குளி 3வது வார்டு காந்திநகரில் கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், மழைக்கு குப்புசாமி என்பவரது வீடு இடிந்தது. அந்த குடும்பம், அங்கன்வாடி மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள், கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், 'இங்கு தங்க கூடாது,' என கூறி சாவியை வாங்கிக்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.