/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட வலியுறுத்தல் ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட வலியுறுத்தல்
ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட வலியுறுத்தல்
ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட வலியுறுத்தல்
ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 11:59 PM

பொள்ளாச்சி;'ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, மத்திய அமைச்சரிடம், பா.ஜ.,வினர் வலியுறுத்தினர்.
சென்னை வந்த மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை, பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து, 'ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை வாங்கி, பாரத் தேங்காய் எண்ணெயாக தயாரித்து ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும்,' என வலியுறுத்தி மனு அளித்தனர்.
மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராசலம், மாவட்ட பொதுச் செயலாளர் துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.